த்ரிஷா பதிவு யாருக்கு...
ADDED : 14 minutes ago
சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கதாநாயகியாகவே வலம் வருபவர் நடிகை த்ரிஷா. சமீபகாலமாக இவரை மையமாக வைத்து பல்வேறு சர்ச்சைகள் எழுகின்றன. தேவையில்லாமல் இவரை தொடர்புபடுத்தி பேசுவது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு அவ்வப்போது பதிலடி கொடுப்பார், சிலவற்றை கண்டும் காணாமல் விட்டு விடுவார்.
இந்நிலையில் இன்ஸ்டாவில் இவர் வெளியிட்ட பதிவு வைரலானது. அதில், ‛‛இந்த வயதிலும் நாடகத்தனமாக இருப்பது சங்கடத்தை தருகிறது. அமைதியை தேடுங்கள். நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும். ஆகவே நல்லதை செய்யுங்கள், நல்லவராக இருங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.
எதற்காக த்ரிஷா இந்த பதிவு போட்டார், யாருக்கான பதிவு என ரசிகர்கள் குழம்பினர்.