நானி பட இயக்குனர் உடன் இணைந்த விஜய் தேவரகொண்டா
ADDED : 8 hours ago
கடந்த 2023ம் ஆண்டில் தெலுங்கில் சௌர்யுவ் இயக்கத்தில் நானி நடித்து வெளிவந்த படம் 'ஹாய் நானா'. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இருந்தாலும் சௌர்யுவ்-க்கு அடுத்த பட வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. ஜூனியர் என்டிஆர் உடன் ஒரு படம் பண்ண ஒரு பேச்சுவார்த்தை நடத்தினார். அதுவும் கைகூடவில்லை. இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா, சௌர்யுவ் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என அறிவித்துள்ளனர். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும், இந்த படத்திற்கு ஹேசம் அப்துல் வாகப் இசையமைக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளனர் . படத்தின் அறிவிப்பு போஸ்டரே வித்தியாசமாக உள்ளது. நிறைய நாய்களுடன் விஜய் தேவரகொண்டாக ஸ்டைலாக நடந்து வருவது போன்று உள்ளது.