உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மிஸ்டர் எக்ஸ்' படங்களின் வசூல் விவரம்!

'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மிஸ்டர் எக்ஸ்' படங்களின் வசூல் விவரம்!


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த பத்தாம் தேதி திரைக்கு வந்த படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. என்றாலும் கூட தியேட்டர்களில் நல்ல கலெக்சன் இருந்தது. இந்த நிலையில் இந்த படம் திரைக்கு வந்து பத்து நாட்களில் உலக அளவில் 58.5 கோடி வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.

அதேபோல், 'எப்ஐஆர்' என்ற படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கத்தில் கடந்த 17ம் தேதி திரைக்கு வந்துள்ள படம் 'மிஸ்டர் எக்ஸ்'. ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அதுல்யா ரவி, காளி வெங்கட், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் ஸ்பை திரில்லர் கதையில் உருவாகி இருக்கிறது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது என்றாலும் திரைக்கு வந்த பிறகு கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. அதனால் வசூலும் மந்தமாகிவிட்டது. அந்த வகையில் இப்படம் திரைக்கு வந்து மூன்று நாட்களில் உலக அளவில் நான்கு கோடி மட்டுமே வசூலித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !