ஏப்., 26ல் மதுரையில் ‛கருப்பு' இசை வெளியீடு
ADDED : 12 hours ago
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா 'கருப்பு' படத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். நட்டி நட்ராஜ், யோகி பாபு, சுவாசிகா, சிவதா உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதில் கருப்பு திரைப்படம் வருகின்ற மே 14ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற ஏப்ரல் 26ம் தேதியன்று மதுரையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்த திட்டமிட்டுள்ளனர் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.