உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரீ ரிலீஸிலும் மோதும் விஜய், அஜித்

ரீ ரிலீஸிலும் மோதும் விஜய், அஜித்

தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக போட்டியாளர்களாக இருந்தவர்கள் விஜய், அஜித். சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு சினிமாவை விட்டு ஒதுங்கி தீவிர அரசியலில் இறங்கினார் விஜய். அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா இல்லையா என்பது மே 4ம் தேதி வெளியாக உள்ள தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தெரிய வரும்.

புதிய படங்களில் இருவருக்கும் எதிர்காலத்தில் மோதல் இருக்குமா இருக்காதா என்பது தெரியாது. ஆனால், 'ஒன் லாஸ்ட் டைம்' ஆக இன்று ரீரிலீஸில் இருவரது படங்களும் மோதிக் கொள்கின்றன.

அஜித் நடித்து 1999ல் வெளிவந்த 'அமர்க்களம்' படமும், விஜய் நடித்து 2005ல் வெளிவந்த 'சிவகாசி' படமும் இன்று வெளியாகி உள்ளன. இன்று வெளியாகும் புதிய படங்களை விடவும் இந்த இரண்டு படங்களுக்கும் அதிக தியேட்டர்கள் கிடைத்துள்ளது என்கிறார்கள்.

அந்தப் படங்கள் வந்த போது குழந்தைகளாக இருந்தவர்களும், அப்போது பிறக்காதவர்களும், இன்றைய இளைஞர்களாக இன்று அந்தப் படங்களை தியேட்டர்களில் பார்க்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !