சூர்யா உடன் மோத தயாராகும் விஜய் ஆண்டனி!
இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி வெற்றி கூட்டணியில் வெளியான 'பிச்சைக்காரன்' படத்திற்கு பிறகு மீண்டும் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி 'நூறு சாமி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷன், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை முதலில் மே 1ம் தேதியன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஒரு சில காரணங்களால் தள்ளிப்போக தற்போது நூறு சாமி படத்தை சற்று தள்ளி மே 15ம் தேதியன்று திரையரங்குகளுக்கு கொண்டு வரலாம் என திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அதற்கு முந்தைய நாள் மே 14ந் தேதியன்று திரைக்கு வரும் சூர்யாவின் 'கருப்பு' படத்துடன் விஜய் ஆண்டனி தனது படத்தை துணிச்சலாக வெளியிடுகிறார். ஒருவேளை விஜய்யின் 'ஜனநாயகன்' மே 7ம் தேதியன்று திரைக்கு வந்தால் நூறு சாமி படம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது என கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.