உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயசூர்யாவின் 'ஆபரேஷன் ட்ரால்' படத்தின் மூலம் இயக்குனரான இசையமைப்பாளர் ரதீஷ் வேகா

ஜெயசூர்யாவின் 'ஆபரேஷன் ட்ரால்' படத்தின் மூலம் இயக்குனரான இசையமைப்பாளர் ரதீஷ் வேகா


சமீப காலமாக மலையாள நடிகர் ஜெயசூர்யா ஒரு பக்கம் அமலாக்கத்துறை விசாரணை, இன்னொரு பக்கம் பரபரப்பான படங்களின் அறிவிப்பு என செய்திகளில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார். மிக பிரமாண்டமாக மலையாளத்தில் உருவாகி வரும் 'கத்தனார்' என்கிற படத்தில் நடித்து வரும் ஜெயசூர்யா நடிப்பில், 'மாயன்' என்கிற படம் உருவாவதாக சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது அவர் ராணுவ அதிகாரியாக நடிக்கும் 'ஆபரேஷன் ட்ரால்' என்கிற படத்தின் அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் தான் ட்ரால். இங்கே நடக்கும் ஒரு ராணுவ ஆபரேஷன் மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. இந்த படத்தை இயக்குவதன் மூலம் பிரபல இசையமைப்பாளர் ரதீஷ் வேகா இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார். கடந்த 2019ல் ஜெயசூர்யா நடித்த 'திருச்சூர் பூரம்' என்கிற படத்திற்கு கதை எழுதி இருந்தார் ரதீஷ் வேகா. தற்போது ஜெயசூர்யா நடிக்கும் படத்தின் மூலமே இயக்குனராகவும் மாறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !