விஷ்ணு விஷால் நடித்துள்ள 'இரண்டு வானம்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
ADDED : 135 days ago
'ஆர்யன்' படத்தை அடுத்து விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் 'இரண்டு வானம்'. இந்த படத்தை ஏற்கனவே அவர் நடிப்பில் 2018ம் ஆண்டில் 'ராட்சசன்' என்ற படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். பேண்டஸி ரொமான்டிக் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த இரண்டு வானம் படத்தின் வெள்ளிச்சுடரே என்ற முதல் சிங்கிள் இன்று வெளியாகி உள்ளது. விஷ்ணு விஷால், மமிதா பைஜூ நடித்துள்ள இந்த பாடலை மதராஜே எழுதியுள்ளார். கபில் கபிலன் பாடியிருக்கிறார். இப்பாடல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.