உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பெத்தி': ஸ்ருதிஹாசனின் ஸ்பெஷல் பாடல் படப்பிடிப்பு ஆரம்பம்

'பெத்தி': ஸ்ருதிஹாசனின் ஸ்பெஷல் பாடல் படப்பிடிப்பு ஆரம்பம்


புச்சிபாபு சனா இயக்கத்தில், ராம் சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'பெத்தி'. பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் ஜன்வாடா என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ஆரம்பமாகி உள்ளது.

ஏஆர் ரஹ்மான் இசையில் ஒரு அதிரடியான பாடலுக்கு ராம் சரண், ஸ்ருதிஹாசன் இருவரும் இணைந்து நடனமாடுகிறார்களாம். இப்பாடலுக்கான படப்பிடிப்பு நான்கு நாட்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.

இதற்கு முன்பு ராம் சரண் ஜோடியாக 'எவடு' படத்தில் நடித்திருந்தார் ஸ்ருதி. இப்போது அவருடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுகிறார். இதற்காக அவருக்கு பெரும் தொகை சம்பளமாகத் தரப்பட்டுள்ளதாகத் தகவல்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !