லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் 'டிசி' படப்பிடிப்பு நிறைவு
ADDED : 139 days ago
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் படம் 'டிசி'. வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நாயகிகளாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இந்தப் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் நடிகர்களாக அறிமுகமாகி உள்ளார்கள். அந்த வரிசையில் லோகேஷும் வருகிறார். காதல், ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.