பில்லா ரீ ரிலீஸ் டிரைலர் வெளியானது
ADDED : 17 minutes ago
கடந்த 2007ம் ஆண்டில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, நமிதா, பிரபு, ரகுமான் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் பில்லா. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த படத்தை கடந்த 2021ம் ஆண்டு ஏற்கனவே ரீரிலீஸ் செய்தார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் அஜித்தின் பிறந்தநாளையொட்டி மே ஒன்றாம் தேதி 150 தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். 4k தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பில்லா ரீரிலீஸ் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது.