உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரியோ ராஜ் தயாரிக்கும் 'பிரவுன் மணி' கதை இதுதானா?

ரியோ ராஜ் தயாரிக்கும் 'பிரவுன் மணி' கதை இதுதானா?


ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் மற்றும் ரெட் ராக் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் முதல் படம் 'பிரவுன் மணி'. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் நடிகர் ரியோ ராஜ். இதில் அவர் நடிக்கவில்லை. ராம் நிஷாந்த் மற்றும் ஜே.எஸ் கவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதிரவன் சம்பத் இயக்கியுள்ளார். தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார்.

லைவ் சவுண்டுடன் உருவாகும் இந்த படம் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் முழுமையாகப் படமாக்கப்பட்டுள்ளது. குடும்பம் மற்றும் நண்பர்கள் உறவை மையமாகக் கொண்ட இந்தப் படம், இரண்டு நண்பர்களின் உணர்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த பயணத்தை சுவாரஸ்யமாகச் சொல்லும் குடும்ப எண்டர்டெய்னராக உருவாகியுள்ளது. நகைச்சுவை, எமோஷன் இதன் முக்கியமான கருவாம். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளரான ரியோவே வெளியிட்டுள்ளார். இந்த படம் தவிர, இன்னும் சில படங்களையும் அவர் நண்பர்களுடன் இணைந்து தயாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !