உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே திருமண நிகழ்ச்சியில் சமந்தா, நாக சைதன்யா

ஒரே திருமண நிகழ்ச்சியில் சமந்தா, நாக சைதன்யா

சமந்தா- நாகசைதன்யா ஆகிய இருவரும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தார்கள். அதையடுத்து நடிகை சோபிதாவை நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டில் சமந்தாவும் இயக்குனர் ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்டார். இப்படியான நிலையில் நேற்று ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் சுனில் நரங்கின் மகள் திருமண நிகழ்ச்சியில் தனது மனைவி சோபிதாவுடன் கலந்து கொண்டுள்ளார் நாகசைதன்யா. அதேபோல் இதே திருமண நிகழ்ச்சியில் சமந்தாவும் தனது இரண்டாவது கணவரான ராஜ் நிடிமொருவுடன் பங்கேற்றுள்ளார். ஆனால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சந்தித்து கொள்ளவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !