கேன்ஸ் திரைப்பட விழாவில் 'பாலன் தி பாய்'
மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் இக்குனர் சிதம்பரம், 'ஆவேஷம்' படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் ஆகியோர் கூட்டணியல் உருவாகி உள்ள படம் 'பாலன் தி பாய்'. இந்தப் படம் தற்போது சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி நகர்கிறது. புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் 'மார்ச் டு பிலிம்' பிரிவில் வருகிற மே 14-ம் தேதி திரையிடப்படுகிறது.
இந்த படத்தை கேவின் புரொடக்ஷன், தெஸ்பியின் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சைஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷாகின் ஷியாம் இசை அமைத்துள்ளார். தாயை தேடி அலையும் ஒரு அநாதை சிறுவனின் சர்வைவல் போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது..
இதுகுறித்து இயக்குநர் சிதம்பரம் கூறும்போது, நாம் அறியாமலேயே சுமந்து கொண்டிருக்கும் சுமைகள் மற்றும் நாம் சேர வேண்டிய இடத்தை நோக்கிய தேடல் தான் இப்படம். உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாதவர்களுக்காகவே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். உண்மையான சினிமாவை மதிக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு இப்படம் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது, என்றார்.