பிசியாக இருக்கும்போதே சினிமாவை விட்டு விலகும் நடிகை
'மா ஊரி பொலிமேரா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை காமாக்சி பாஸ்கர்லா. அதன்பின் நாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்தார். சமீபத்தில் அதிவி சேஷ் நடிப்பில் உருவான 'டகாயிட்' படத்தில் நடித்திருந்தார். தற்போது 'அகதா' மற்றும் 'மா ஊரி பொலிமேரா 3' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிப்பை விட்டு விலகி இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் எழுதியிருப்பதாவது: எனக்கு சினிமா மீதோ அல்லது நடிப்பின் மீதோ சலிப்பு ஏற்பட்டு இந்த முடிவை எடுக்கவில்லை. சுய பராமரிப்புக்கும், மனநலத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த கடினமான முடிவை எடுத்துள்ளேன்.
சில நேரங்களில், நமது இலக்குகளை சென்றடைய, ஒரு படி பின்வாங்குவது அவசியம். நான் எங்கும் போய்விடவில்லை, விரைவில் உங்களிடம் திரும்பி வருவேன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காமாக்சியின் இந்த முடிவிற்கு பலரும் பல காரணங்களை சொல்லி வருகிறார்கள்.