பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி
பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ், 73, மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் விஜய் அஞ்சலி
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மகன் சாந்தனு மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்த அவர், பாக்யராஜ் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
திமுக., தலைவர் ஸ்டாலின் அஞ்சலி
பாக்யராஜ் உடலுக்கு முன்னாள் முதல்வரும், திமுக., தலைவருமான ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் கேஎன் நேரு, டிஆர் பாலு, ராசா உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னியரசு, விசக., தலைவர் திருமாவளவன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம், அஞ்சலி செலுத்தினார்.
திரையுலகினர் அஞ்சலி
பாக்யராஜ் உடலுக்கு ராதிகா, சரத்குமார், மணிரத்னம், சமுத்திரகனி, ஏஎல் விஜய், ஹெச். வினோத், மன்சூர் அலிகான், பி வாசுஆர் சுந்தர்ராஜன், பார்த்திபன், சுஹாசினி, இசையமைப்பாளர் தேவா, சந்தானபாரதி, சித்ரா லட்சுமணன், பாண்டியராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.