உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது

'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது

என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் இயக்குனர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்து வரும் படம் 'மை டியர் சிஸ்டர்'. இதை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். அக்கா, தம்பி கதை களத்தை மையப்படுத்தி காமெடி மற்றும் எமொஷனல் படமாக உருவாகியுள்ளது.

ஏற்கனவே இந்த படம் 2026 சம்மரை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர். ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படம் இதுவரை வெளியாகவில்லை. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் மை டியர் சிஸ்டர் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்லைட் ரைட்ஸ் உரிமையை விஜய் டிவி, ஜியோ ஹாட் ஸ்டார் ரூ. 15 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், அருள்நிதி படங்களில் இது மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது என்கிறார்கள். படம் அடுத்தமாதம் இறுதியில் அல்லது ஜூலையில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !