உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி

விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி

நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா தற்போது சமூக நலப் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். நாகர்கோவிலில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் “எங்களது குடும்பம் எப்போதும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளது. எனது தந்தை ரஜினிகாந்த் நிறைய நலத்திட்டங்கள் செய்து வருகிறார். நான் எனது நலத்திட்ட உதவிகளை கன்னியாகுமரியில் இருந்து துவங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. இது முதல் முயற்சி மட்டுமே.

தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்று நலத்திட்ட உதவிகள் வழங்க முயற்சி எடுப்போம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வந்துள்ளோம். அரசியலில் இருந்தால்தான் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என இல்லை, எப்படி வேண்டுமென்றாலும் செய்யலாம். மக்களுக்கு எது தேவையோ அதை செய்ய முயற்சி செய்வோம்.

புதிதாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். விஜய் அண்ணா நல்லது செய்வார் என ஓட்டுபோட்ட மக்கள் நிறைய எதிர்பார்ப்பில் உள்ளனர். நிறைய சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளார், மேலும் நிறைய சவால்களை வரவுள்ளது அவற்றை எதிர்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !