உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'திருக்குறள்' படத்தின் 2ம் பாகம்: தமிழ், ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்படுகிறது.

'திருக்குறள்' படத்தின் 2ம் பாகம்: தமிழ், ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்படுகிறது.


'காமராஜ்', 'வெல்கம் பேக் காந்தி' திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், 'திருக்குறள்' திரைப்படத்தை சென்ற ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தை ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். பலரின் பாராட்டை பெற்ற திருக்குறள் படம் இணையதளத்தில் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக திருக்குறள் படத்தில் இடம்பெறாத மேலும் பல கருத்துக்களை வலியுறுத்தி அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. இது குறித்து இயக்குனர் ஏ.ஜே பாலகிருஷ்ணன் பகிர்ந்தவை:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள், ரோம் கிரேக்கம் போன்ற மேற்குலக நாடுகளுடனும், சீனா, இந்தோனேசியா போன்ற கிழக்காசிய நாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். இந்த படத்தில் திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த மேலும் பல ஆளுமைகள், கலாசாரத் தொடர்புகள், வணிகத் தொடர்பு, தமிழர்களின் சங்ககால பண்பட்ட நாகரீகம் படமாக்கப்பட உள்ளது.

சர்வதேசப் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் ஹாலிவுட் கலைஞர்களின் பங்களிப்பும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இப்படத்தில் பயன்படுத்தப்பட உள்ளது. பெருமை வாய்ந்த நமது தமிழ் பண்பாட்டை திருக்குறள் வாயிலாக உலகுக்கு பறை சாற்றுவதே இப்படத்தின் நோக்கமாகும். ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் தயாராகும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

SANKAR
2026-05-18 16:39:03

there is one issue..first part not english subtitles which is necessary for pan India and global reach