ஜூனியர் என்டிஆரின் 43வது பிறந்தநாள்: ரசிகர்கள் தள்ளுமுள்ளு!
தற்போது பிரசாந்த் நீல் இயக்கும் 'டிராகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். இந்த படத்தின் நான்கு நிமிட கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று அவரது பிறந்தநாளையொட்டி வெளியிட்டப்பட்டுள்ளது. அதில், என்டிஆரின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அதே சமயம், பிரசாந்த் நீலின் முந்தைய படங்களின் சாயல்கள் இந்த படத்தில் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் இன்று ஜூனியர் என்டிஆரின் 43வது பிறந்தநாளையொட்டி ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று அவரை நேரில் வாழ்த்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டுள்ளார். அப்போது அனைவரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்கள் மீது தடியடியில் ஈடுபட்டுள்ளார்கள். அதை பார்த்த ஜூனியர் என்டிஆர் ஓடி வந்து ரசிகர்களை தாக்க வேண்டாம் என்று காவல்துறையினரை கேட்டுக் கொண்டதோடு, தனது ரசிகர்களையும் அமைதிப்படுத்தி இருக்கிறார்.