‛திரிஷ்யம் 3' - முதல் காட்சியிலேயே தவித்த ரசிகர்கள்
ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்த 'திரிஷ்யம் 3' படம் இன்று வெளியாகி உள்ளது. கேரளாவில் மட்டுமே சுமார் 500 தியேட்டர்களில் இப்படம் வெளியாகி உள்ளதாக படத்தின் நாயகன் மோகன்லால் பெருமையுடன் இன்று பதிவிட்டிருந்தார்.
ஆனால், படத்தின் முதல் காட்சியைப் பார்த்ததுமே ரசிகர்கள் தவிக்க ஆரம்பித்து விட்டார்கள். படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படம் பற்றிய விமர்சனங்களை எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.
படம் நிறையவே ஏமாற்றிவிட்டது என்பதுதான் பொதுவான கருத்தாக உள்ளது. படத்தின் கடைசி 15 நிமிடங்கள் தவிர திரைக்கதையில் எந்தவிதமான பரபரப்பும் இல்லை என்கிறார்கள்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படத்திற்கு இப்படியான விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில், நயன்தாரா மற்றும் பலர் நடித்த 'பேட்ரியாட்' படம் மே 1ல் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாக அடுத்த அதிர்ச்சியா என மலையாள ரசிகர்கள், குறிப்பாக மோகன்லால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.