உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மற்றுமொரு வெற்றி, கடவுளுக்கு நன்றி சொன்ன திரிஷா

மற்றுமொரு வெற்றி, கடவுளுக்கு நன்றி சொன்ன திரிஷா


மே மாதம் திரிஷாவின் பிறந்தநாள் மாதம். மே மாதம் ஆரம்பமான போது, “மே (என்னுடைய) சீசன் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிவிட்டது,” என்று பதிவிட்டிருந்தார்.

மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தது. அவருடன் தோழமையில் இருக்கும் நடிகர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை இடங்களை வென்று முதல்வராகப் பதவியேற்றார். விஜய் பதவியேற்ற போது அதில் கலந்து கொண்டு சிறப்பித்தார் திரிஷா. அன்றைய தினம், “அன்பு எப்போதுமே சத்தமானது,” என்று பதிவிட்டிருந்தார்.

அவர் நாயகியாக நடித்த 'கருப்பு' படம் கடந்த வாரம் வெளியானது. படம் நல்ல வரவேற்பைப் பெற்று 175 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று, “மற்றுமொரு வெற்றி, என எனது மாயஜால 'மே' சொன்னது…கடவுளின் செயல்கள்..,” எனப் பதிவிட்டு 'கருப்பு' படத்தின் படப்பிடிப்புப் புகைப்படங்கள், வீடியோவைப் பதிவிட்டிருந்தார்.

இந்த வருடப் பிறந்த நாள் திரிஷாவுக்கு ஸ்பெஷலான பிறந்தநாள். அவரது நெருங்கிய நண்பர் விஜய்யின் தேர்தல் வெற்றி, அடுத்து அவரது படத்தின் வெற்றி என இரண்டுமே சிறப்பாக அமைந்துவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !