உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 'சகோதரி'யை வெற்றி பெற வைத்த சந்திரபாபு

பிளாஷ்பேக்: 'சகோதரி'யை வெற்றி பெற வைத்த சந்திரபாபு


தமிழ், கன்னடத்தில் ஒரே நேரத்தில் தயாரான படம் 'சகோதரி'. கோபி வீரண்ணா என்ற கன்னட தயாரிப்பாளர் தயாரித்தார். ஏவிஎம் நிறுவனம் நிதி உதவி செய்தது. இதில் பிரேம் நசீர், கே.பாலாஜி, தேவிகா, ராஜசுலோச்சனா நடித்தார்கள். பீம்சிங் இயக்கினார், ஆர்.சுதர்சனம் இசை அமைத்தார்.

படம் தயாராகி முடிந்ததும், ஒப்பந்தப்படி நிதி உதவி செய்துள்ள ஏவிஎம் நிறுவனத்திற்கு போட்டுக் காட்ட வேண்டும். அப்படி காட்டியபோது படத்தை பார்த்த ஏவி.மெய்யப்ப செட்டியார். படத்தின் கதை நன்றாக இருந்தாலும், மக்கள் ரசிக்கும்படியான விஷயங்கள் இல்லை. படத்தை எல்லோரும் பாராட்டுவார்கள் ஆனால் தியேட்டரில் ஓடாது என்ற தனது கருத்தை பளிச்சென்று சொன்னார்.

பின்னர் அவரது ஆலோசனைப்படி சந்திரபாபுவை அழைத்து அவரை வைத்து ஒரு தனி காமெடி டிராக்கை படமாக்கினார்கள். அதில் அவர் பால்காரனாக நடித்தார். பால்காரன் போர்வையில் வீட்டிற்குள் புகுந்து சின்ன சின்ன பொருட்களை திருடுகிற மாதிரியான கேரக்டர். படம் வெளியானதும் சந்திரபாபுவின் காமெடி டிராக்கிற்காகவே ஓடி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !