சூர்யாவின் முதல் 200 கோடி படம் 'கருப்பு'
ADDED : 1 hours ago
தமிழ் சினிமாவில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக வெற்றிக்காகத் தவமாய் தவமிருந்தவர் சூர்யா. இத்தனை வருடங்களில் தியேட்டர்களில் வெளியான அவரது படங்கள் வணிக ரீதியாக வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து தோல்விகளையே தழுவி வந்தன.
அதை கடந்த வாரம் வெளியான 'கருப்பு' படம் மாற்றியது. எல்லை காவல் தெய்வமான கருப்பசாமியை மையமாக வைத்து பக்தி கலந்த கமர்ஷியல் படமாக அமைந்ததே அவருக்கு இந்த வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளது.
வெளியான 3 நாட்களில் 147 கோடியை வசூலித்த படம், வெளியான 6 நாட்களில் 207 கோடியை வசூலித்துள்ளது. சூர்யாவுக்கு முதல் 200 கோடி படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.
இந்த வார இறுதியிலும் இப்படத்திற்கான வரவேற்பு சிறப்பாக இருந்தால் 250 கோடியைக் கடக்கவும் வாய்ப்புள்ளது.