துஷாராவின் முதல் பான் இந்தியா படம் 28ம் தேதி ரிலீஸ்
துஷாரா விஜயன் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ள முதல் பான் இந்தியா படம் 'காட்டாளன்'. 2024ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'மார்கோ' திரைப்படத்தை தொடர்ந்து கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஷெரீப் முகம்மது தயாரித்துள்ளார். ஆண்டனி வர்கீஸ், கபீர் சிங், சுனில், சித்திக், பர்த் திவாரி, ராஜ் திரன்தாசு, ஹரி ஷங்கர் நாராயணன், ஆன்சன் பால் மற்றும் சந்தீப் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படம் வருகிற 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் காட்டில் நடக்கும் பரபரப்பு கடத்தல் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. ரவி பஸ்ரூர் இசையமைக்க, ரேனா திவே ஒளிப்பதிவு செய்துள்ளார்.