உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜி.டி.நாயுடுவின் வரலாற்று படம் ஜூலை 17ல் ரிலீஸ்

ஜி.டி.நாயுடுவின் வரலாற்று படம் ஜூலை 17ல் ரிலீஸ்


இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் பயோபிக்கில் நடித்த மாதவன், தற்போது மற்றொரு விஞ்ஞானியும், தமிழ் நாட்டை சேர்ந்தவருமான ஜி.டி.நாயுடுவின் பயோபிக்கில் நடித்து வருகிறார். 'ஜிடிஎன்' என்ற இந்த படத்தை 'ஓஹோ எந்தன் பேபி' பட இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்குகிறார்.

ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் நடிக்கிறார்கள். வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் பணிகள் முடிவுக்கு வந்த நிலையில் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை மாதம் 17ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !