கேமிங் நிறுவனத்தில் முதலீட்டாளராக மாறிய மகேஷ் பாபு
ராஜமவுலி இயக்கி வரும் வாரணாசி படத்தில் நடித்து வருகிறார் மகேஷ் பாபு. இப்படத்தில் அவருடன் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, கீரவாணி இசையமைக்கிறார். இப்படம் 2027ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி திரைக்கு வருகிறது.
தற்போது மகேஷ் பாபு கேமிங் துறையில் கால் பதித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமான ஷாட்கன் கேம்ஸ் நிறுவனத்தில் முதலீட்டாளராக மாறியுள்ளார். இந்த கூட்டுத்தன்மை, இயக்குனர் விக்கி அரோரா தலைமையில் உருவாக்கப்பட்டு வரும் டேக் டவுன் ஜெனிசிஸ் என்ற கன்சோல் அட்வென்ச்சர் கேமின் உருவாக்கத்திற்கு ஆதரவளிக்கிறது.
இந்நிறுவனத்தின் இணை நிறுவனர்களான ஜீத் சந்தன் மற்றும் விடித் மேத்தா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிறுவனத்தில் முதலீட்டாளராக இணைந்திருப்பது குறித்து மகேஷ் பாபுவும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.