உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொங்கலுக்கு வெளியாகும் 'டயங்கரம்': டீசரை வெளியிட்டு படக்குழு அறிவிப்பு

பொங்கலுக்கு வெளியாகும் 'டயங்கரம்': டீசரை வெளியிட்டு படக்குழு அறிவிப்பு


யுடியூப்பில் பிரபலமானவர் வி.ஜே.சித்து. சில டிவி சேனல்களில் விஜே.,வாகவும் இருந்துள்ளார். இவர் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 'டயங்கரம்' எனும் படத்தை இயக்கி நடித்துள்ளார். இன்ஜினியரிங் கல்லூரி மாணவராக வரும் சித்து மற்றும் அவரது நண்பர்கள் என கலகலப்பான கதையாக உருவாக்கியுள்ளது.

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு, படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் நட்டி நட்ராஜூம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !