உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்திய அளவில் வசூலைக் குவித்த இரண்டாம் பாகப் படங்கள்

இந்திய அளவில் வசூலைக் குவித்த இரண்டாம் பாகப் படங்கள்


இந்தியத் திரையுலகத்தில் இரண்டாம் பாகப் படங்கள் என்பது வழக்கமாக இருக்கும் ஒன்றுதான். ஆனால், அந்தப் படங்களின் வசூலில் ஒரு ஆச்சரிய ஒற்றுமை வசூலைலக் குவித்த சில படங்களுக்கு உள்ளது. அப்படங்களின் முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகப் படங்கள்தான் அதிக வசூலைக் குவித்துள்ளன.

கடந்த 10 வருடங்களுக்கான படங்களில், இந்திய அளவில் ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்ட படங்களில், ஒரு கணக்கை எடுத்துப் பார்த்தால் 2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' தெலுங்குப் படம் 1800 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்தது. 2015ல் வெளிவந்த அதன் முதல் பாகத்தின் வசூல் 600 கோடிக்கும் சற்ற கூடுதல். முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் மூன்று மடங்கு அதிகமாக வசூலித்தது.

2022ல் வெளிவந்த 'கேஜிஎப் 2' கன்னடத் திரைப்படத்தின் வசூல் 1200 கோடிக்கும் சற்றே கூடுதல். 2018ல் வெளிவந்த அதன் முதல் பாகம் 250 கோடியை வசூலித்தது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் ஐந்து மடங்கு அதிகம் வசூலித்துக் கொடுத்தது.

2024ம் ஆண்டில் வெளிவந்த 'புஷ்பா 2' தெலுங்குப் படம் 1800 கோடி வரை வசூலித்ததாக சொல்லப்பட்டது. 2021ல் வெளிவந்த அதன் முதல் பாகத்தின் வசூல் சுமார் 350 கோடி. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் ஐந்து மடங்கு அதிகமாக வசூலித்தது.

2026ல் வெளிவந்த ஹிந்திப் படமான 'துரந்தர்' இரண்டாம் பாகமான 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் 1800 கோடிக்கும் கூடுதலாக வசூலித்தது. இந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்த இந்தியப் படமாக இருக்கிறது. கடந்த 2025ம் வருடம் வெளிவந்த இப்படத்தின் முதல் பாகம் 1400 கோடி வசூலைப் பெற்றது. இரண்டு பாகங்களும் சேர்ந்து 3200 கோடிக்கு வசூலித்துக் கொடுத்துள்ளது. வேறு எந்த ஒரு இரண்டு பாக இந்தியப் படமும் செய்யாத ஒரு சாதனை இது.

தமிழ் சினிமாவில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான 'ஜெயிலர் 2' படம் தற்போது 800 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. 2023ல் வெளியான இப்படத்தின் முதல் பாகம் 650 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது. இரண்டு பாகங்களையும் சேர்த்து 1450 வசூலைக் குவித்துள்ளது. இது இரண்டு பாகங்களாக வெளியான தமிழ்ப் படங்களில் முதன்மையான ஒரு சாதனை.

வரும் காலங்களில் இப்படியான ஒரு சாதனையை ஒரு தமிழ்ப் படம் முறியடிக்க சில பல வருடங்கள் ஆகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !