நயன்தாராவிற்கு கட் அவுட் ஆரோக்கியமான மாற்றம்: ரெஜினா
நயன்தாரா நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன்-2' படம் தீபாவளி ரிலீசாக வருகிற 6ம் தேதி வெளிவருகிறது. இதை முன்னிட்டு நயன்தாராவின் 60 மற்றும் அடி கட் அவுட் வேல்ஸ் நிறுவனத்தின் தியேட்டரில் வைக்கப்பட்டுள்ளது. கட் அவுட்களால் விபத்து அதிகரிப்பதால் பொது இடங்களில் கட்அவுட் வைப்பது அரசால் தடைசெய்யப்பட்டது. ஆனாலும் தியேட்டர் வளாகங்களில் கட் அவுட் வைக்கப்பட்டு வருகிறது.
இதுவரை ரஜினி, கமல், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு கட் அவுட் வைக்கப்பட்டது. தாய் கிழவி படம் வெளியானபோது நடிகை ராதிகாவிற்கும் உயர்ந்த கட் அவுட் வைக்கப்பட்டது. தற்போது நயன்தாராவிற்கு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தில் வில்லியாக நடித்துள்ள ரெஜினி கூறியிருப்பதாவது: பல தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் முன்னணி சூப்பர் ஸ்டார்களுக்கு மட்டுமே பிரமாண்டமான கட் அவுட்கள் வைக்கப்பட்டுப் பார்த்திருக்கிறோம். ஆனால் நடிகைகளுக்கு அதை யாரும் செய்ததில்லை. ஆண் நடிகர்களுக்கு இணையான பிரமாண்ட கட் அவுட்கள் நயன்தாரா, ராதிகா போன்ற பெண் நடிகைகளுக்கும் வைக்கப்படுவது திரையுலகில் ஆரோக்கியமான ஒரு மாற்றத்தின் அடையாளம் என்கிறார் ரெஜினா.