உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தொழிலதிபராகவும் கலக்கும் சமந்தா: 8 மாதத்தில் 120 கோடி வருமானம்

தொழிலதிபராகவும் கலக்கும் சமந்தா: 8 மாதத்தில் 120 கோடி வருமானம்

தென்னிந்திய சினிமாவின் முக்கியமான நடிகை சமந்தா. திருமணம், விவாகரத்து, மறுமணம், கர்ப்பம் இப்படி சொந்த வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்து வந்தாலும் சினிமாவில் தொடர்ந்து தனக்கான இடத்தை தக்க வைத்து வருகிறார். அதே நேரத்தில் பல தொழில் நிறுவனங்களையும் தொடங்கி அதிலும் சாதனை படைத்து வருகிறார். ஷகி என்ற ஆடை நிறுவனத்தின் மூலமாகவும், ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாகவும் பல கோடி சம்பாதித்து வருகிறார்.

அதில் முக்கியமானது அவர் தனது நண்பர்களுடன் இணைந்து துவக்கி உள்ள 'சீக்ரெட் அல்கெமிஸ்ட்' என்ற வாசனை திரவிய நிறுவனம். இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட 8 மாதங்களிலேயே சுமார் 120 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயற்கை சார்ந்த நறுமண அனுபவத்தையும் தனித்துவமான தயாரிப்புகளையும் மையமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !