உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புது அமைப்பு துவங்கிய சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம்: வேகமெடுக்கும் அரசியல் பணிகள்

புது அமைப்பு துவங்கிய சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம்: வேகமெடுக்கும் அரசியல் பணிகள்


சமீப காலமாக நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம் வேகமாக விறுவிறுப்பாக இயங்கி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னையில் சந்தித்து பரபரப்பாக பேசினார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் அவர் ரசிகர் மன்றம் சார்பில் 'கலை இலக்கிய பண்பாட்டுப் பிரிவு' என்ற புது அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரசிகர் மன்றம் சார்பில் வெளியிடப்பட்ட வீடியோவில், தமிழின் தொன்மை, கலை மற்றும் இலக்கியப் பண்பாட்டின் மீது பேரார்வம் கொண்ட நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் வழிகாட்டுதலின்படி, தென் சென்னை கிழக்கு மாவட்ட நற்பணி இயக்கத்தின் 'கலை இலக்கிய பண்பாட்டுப் பிரிவு' சார்பில் சென்னை பெசன்ட் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'தமிழ் தாத்தா' உ.வே.சா நூலகத்திற்கு சிறப்பு ஆய்வு சுற்றுலா மேற்கொள்ளப்பட்டது.

நமது செம்மொழி தமிழின் மாண்பையும், பழம்பெரும் வரலாற்றையும் இன்றைய தலைமுறையினரும், நற்பணி இயக்கத்தை சார்ந்த தோழர்களும் ஆழமாக உணர்ந்து அறிந்து கொள்ளும் உயரிய நோக்கத்தோடு இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இப்பயணத்தின் போது, சங்க இலக்கியங்களையும் அரிய ஓலைச்சுவடிகளையும் தேடித்தேடி தொகுத்து தமிழுக்கு உயிர்கொடுத்த தமிழ் தாத்தா உ.வே.சா.,வின் அரிய நூல்கள், பழங்கால சுவடிகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள முறைகளை நூலக நிர்வாகிகள் நற்பணி இயக்கத்தின் கலை இலக்கிய பண்பாட்டுப் பிரிவின் நிர்வாகிகளுக்கு முழுமையாக விவரித்து விளக்கமளித்தனர்.

நடிகர் தனுஷ் பாணியில் சிவகார்த்திகேயனும் அரசியலுக்கு வர திட்டமிடுகிறார். அதற்கான முன்னேற்பாடு தான் இதுவா என கேள்வி எழுந்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !