சந்தானம், சூரி பாணிக்கு மாறும் யோகிபாபு
காமெடியனாக நடித்து வரும் யோகிபாபு அவ்வப்போது கதைநாயகனாகவும் நடித்து வருகிறார். அப்படி ‛மண்டேலா, தர்மபிரபு, கூர்கா, பொம்மை நாயகி, துாக்குதுரை, லக்கிமேன்' உட்பட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் கூட ‛கெணத்த காணோம்' என்ற படத்தில் நடித்தார். இப்போது ரவிமோகன் இயக்கும் ‛அன் ஆர்டினரி மேன்' என்ற படத்தில் அப்படி நடித்து வருகிறார். அடுத்து அவரை கதைநாயகனாக்கி 'யோகிபாபும் 100 குரங்குகளும்' என்ற படத்தை இயக்க உள்ளதாக பசங்க பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
இது தவிர, யோகிபாபுவே ஒரு படத்தின் கதை எழுதி, கதைநாயகனாக நடிக்கிறார். அந்த படத்தை அவர் நண்பர் இயக்குகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த காமெடி படங்கள் ஓடவில்லை. அவர் காமெடிக்கு சிரிப்பு அதிகம் இல்லை. அதனால், சந்தானம், சூரி, சதீஷ் பாணியில் இனி முழுக்க கதைநாயகனாக நடிக்கலாம். காமெடியை தவிர்த்துவிடலாம் என நினைக்கிறாராம். அதற்காகவே இப்படி பாதை மாறுவதாக தகவல். அவர் கதைநாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்க பலர் ரெடியாக இருக்கிறார்களாம்.