உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் பக்கம் பார்வையை திருப்பும் மலையாள திரையுலகம்

தமிழ் பக்கம் பார்வையை திருப்பும் மலையாள திரையுலகம்


சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள படங்கள் தமிழில் டப் செய்யப்படுவது குறைவு. குறைந்த எண்ணிக்கையிலான மலையாள படங்கள் மட்டுமே தமிழில் திரையிடப்படும். ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' வெற்றிக்குபின் அந்த பார்வை மாறிவிட்டது. இப்போது கேரளாவில் ரிலீஸ் ஆகும் அன்று தமிழிலும் பல மலையாள படங்கள் டப்பாகின்றன. நேற்று மோகன்லாலின் ‛திரிஷ்யம் 3' கூட தமிழில் வந்துள்ளது. இன்று பசில் ஜோசப் நடித்த ‛அதிரடி' டப்பாகி வந்துள்ளது.

கடந்த வாரம் மம்முட்டி, மோகன்லால் நடித்த ‛பேட்ரியாட்' படத்தின் தமிழ் பதிப்பு தமிழகத்தில் பல தியேட்டர்களில் ஓடியது. பாவனா நடித்த அனோமியும் தமிழில் டப்பானது. டொவினோ நடித்த ‛பள்ளிச்சட்டம்பி'யும் தமிழகத்தில் ரிலீஸ் ஆனது. அதேபோல், ‛யூத்' படத்தின் மூலம் பிரபல மலையாள நடிகர் சுராஜ்வெஞ்சரமுடு தமிழில் பிரபலம் ஆனார். அடுத்து கர படத்திலும் நடித்தார். ‛கருப்பு' படத்தில் மலையாள சீனியர் நடிகரான இந்திரன் நடித்துள்ளார். பிரபல மலையாள ஹீரோவான பசில்ஜோசப் ‛ராவடி' என்ற தமிழ் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

ரஜினியின் ‛ஜெயிலர் 2'வில் மோகன்லால் இருக்கிறார். துல்கர்சல்மான், பிருத்விராஜ் படங்கள் தொடர்ந்து தமிழில் வருகின்றன. ஒரு காலத்தில் தமிழ் படங்களுக்கு மலையாளத்தில் நல்ல மார்க்கெட் இருந்தது. குறிப்பாக, விஜய், சூர்யா, விஷால், கார்த்தி படங்களுக்கு வரவேற்பு இருந்தது. இப்போது மலையாள படங்களுக்கு தமிழில் பிஸினஸ் உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !