உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மராத்தி படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'ராஜா சிவாஜி'

மராத்தி படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'ராஜா சிவாஜி'


இந்தியத் திரையுலகத்தில் தென்னிந்திய அளவில் உள்ள நான்கு மாநிலங்களின் மொழிகளிலுமே படங்கள் பல வருடங்களாக வெளியாகி வருகின்றன. வட இந்தியாவைப் பொறுத்தவரையில் ஹிந்தி, போஜ்புரி, மராத்தி என சில மொழிகளில் மட்டும்தான் படங்கள் தயாராகி வருகின்றன.

மராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் ஹிந்திப் படங்கள்தான் அதிகம் வெளியாகின்றன. மராத்தி மொழிகளிலும் அவ்வப்போது படங்கள் வந்தாலும் அவை பெரிய அளவில் வசூல் சாதனை படைப்பதில்லை.

மராத்திய மொழியில் இதுவரையில் வெளியான படங்களில் 2016ல் வெளியான 'சாய்ராட்' படம் மட்டும்தான் 100 கோடி வசூலைப் பெற்ற ஒரே படமாக இருந்தது. அந்த சாதனையை இந்த மாதம் மே 1ம் தேதி வெளியான 'ராஜா சிவாஜி' படம் முறியடித்தது. அது மட்டுமல்ல 120 கோடி வசூலித்து அதிக வசூலைக் குவித்த மராத்தி படங்களில் முதலிடத்தில் உள்ளது.

சுமார் 75 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த வரலாற்றுத் திரைப்படம் 120 கோடி வசூலித்து வசூல் ரீதியாகவும் ஓரளவு வெற்றிப் படமாக அமைந்துவிட்டது.

தமிழில் சில படங்களில் நடித்த ஜெனிலியாவின் கணவரான ரித்தேஷ் தேஷ்முக் இந்தப் படத்தை இயக்கி சத்ரபதி சிவாஜி மகாராஜ் கதாபாத்திரத்திலும் நடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !