கருப்பு வெற்றி : ஆர்ஜே பாலாஜியைப் பாராட்டிய ரஜினிகாந்த்
ADDED : 29 minutes ago
சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிக்க ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான 'கருப்பு', வெற்றிப் படமாக அமைந்துள்ளது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் போன் செய்து பாராட்டியதாக இயக்குனர் ஆர்ஜே பாலாஜி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“பாலாஜி… சூப்பர், சூப்பர், சூப்பர்… நீங்க சாதிச்சிட்டீங்க... நீங்க சாதிச்சிட்டீங்க… எவ்வளவு பெரிய வெற்றி… நாம சீக்கிரமே மீண்டும் சந்திப்போம்” என்று பாராட்டியதாக பாலாஜி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹிட் கொடுக்கும் இயக்குனர்கள் இப்போது மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். பாலாஜிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து, சந்திக்கலாம் என்றும் கூறியுள்ளதால் அடுத்து இருவரும் இணைந்து படம் செய்யவும் வாய்ப்புள்ளது.