ஜூன் திரைக்கு வரும் அருள்நிதியின் 'டிமான்டி காலனி-3'
ADDED : 1 minutes ago
அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் 'டிமான்டி காலனி'. ஹாரர் திரில்லர் கதையில் உருவான அப்படம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்து டிமான்டி காலனி-2 படமும், அவர்கள் கூட்டணியில் 2024ல் வெளியானது. இந்நிலையில் தற்போது அப்படத்தின் மூன்றாம் பாகமும் உருவாகியுள்ளது. அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஜூன் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.
இதையடுத்து டிமான்டி காலனி படத்தின் நான்காம் பாகமும் அருள்நிதி-ஞானமுத்து கூட்டணியில் உருவாகிறது.