உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சர்வம் மாயா'வில் டெலுலு கதாபாத்திரம் மிஸ் ஆனது ஏன் ? ; ப்ரீத்தி முகுந்தன்

'சர்வம் மாயா'வில் டெலுலு கதாபாத்திரம் மிஸ் ஆனது ஏன் ? ; ப்ரீத்தி முகுந்தன்


தமிழில் கவின் நடித்த 'ஸ்டார்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ப்ரீத்தி முகுந்தன். அதன்பிறகு தெலுங்கில் வெளியான 'கண்ணப்பா' மூலம் ஓரளவு பிரபலமான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியான 'சர்வம் மாயா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் வெளியாகியுள்ள 'பிளாஸ்ட்' படத்தில் அர்ஜுன் மகளாக நடித்துள்ளதுடன் படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ப்ரீத்தி முகுந்தன் கூறும்போது, சர்வம் மாயா படத்தில் ரியா சிபு நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற டெலுலு என்கிற அந்த பெண் ஆவி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் என்னைத்தான் ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் அந்த சமயத்தில்தான் தெலுங்கில் கண்ணப்பா, தமிழில் பிளாஸ்ட் ஆகிய படங்களிலும் நான் மாறி மாறி நடிக்க வேண்டி இருந்தது.

அதனால் என்னால் அந்த கதாபாத்திரத்திற்கான கால்ஷீட் முழுவதுமாக கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் என் நடிப்புத் திறமையைப் பார்த்த படத்தின் இயக்குனர் அகில் சத்யன், அந்த படத்திலேயே நடிகர் நிவின்பாலிக்கு மும்பையில் உதவி செய்யும் ஒரு மியூசிக் மேனேஜர் கதாபாத்திரத்தைக் கொடுத்தார் என்று கூறியுள்ளார். பிளாஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் 'இதயம் முரளி' மற்றும் 'தாசமாக்கான்' ஆகிய படங்களில் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !