உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பத்து வருடங்களில் 6.5 லட்சம் மரக்கன்றுகளை நட்ட சாயாஜி ஷிண்டே

பத்து வருடங்களில் 6.5 லட்சம் மரக்கன்றுகளை நட்ட சாயாஜி ஷிண்டே


தமிழில் 'பாரதி, தூள், சந்தோஷ் சுப்பிரமணியம்' உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் சாயாஜி ஷிண்டே. மகாராஷ்டிராவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தென்னிந்திய மொழிகளையும் சேர்த்து கிட்டத்தட்ட எட்டு மொழிகளில் நடித்துள்ளார். இந்த நிலையில்தான் அவர் கடந்த பத்து வருடங்களாக மகாராஷ்டிரா முழுவதும் பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகிறார் என்றும், இதுவரை கிட்டத்தட்ட 6.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்கிற ஆச்சரியத் தகவலும் வெளியே தெரியவந்துள்ளது.

தன் தாயின் இறுதி மூச்சை தன்னால் பிடித்து நிறுத்த முடியாது, அதே சமயம் தன் தாயின் சுவாசம் காலம் உள்ள காலம் வரை பரவி இருக்க வேண்டும் என நினைத்த சாயாஜி ஷிண்டே, தன் தாயின் எடைக்கு எடை விதைகளை நிறுத்து, கடந்த 2016 முதல் அவற்றை மகாராஷ்டிராவில் உள்ள பல இடங்களில் விதைத்து மரமாக வளர்த்து வருகிறார்.

ஆரம்பத்தில் தனது சொந்த கிராமத்தில் 2000 மரக்கன்றுகளுடன் தொடங்கிய அவரது பயணம் இன்று சஹ்யாத்ரி தேவராபி என்கிற தொண்டு நிறுவனமாக வளர்ந்து, தற்போது மகாராஷ்டிராவின் 48 முக்கிய இடங்களில் இந்த மரம் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது வெறும் சுற்றுச்சூழல் பணி மட்டுமல்ல, கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்துகிறது என்றும் சாயாஜி ஷிண்டே கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD
2026-05-29 14:43:18

Eppoyume வில்லன்கள் காமெடி ஆட்கள் தான் உண்மையான ஹீரோ..