பிளாஷ்பேக்: தமிழில் ஒரே படத்தில் நடித்த பேபி வரலட்சுமி
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்றவர் பேபி வரலட்சுமி. புகழ்பெற்ற 'சங்கராபரணம்' படத்தில் சோமயாராஜுலு மகளாக நடித்திருந்தார். தெலுங்கு படங்களில் வரலட்சுமி என்ற பெயரில் நடித்து வந்த இவர் தமிழில் கல்யாணி என்ற பெயரில் நடித்த ஒரே படம் 'சொந்தம் 16'. இதில் அவர் மோகன் ஜோடியாக நடித்தார். மோகன் சொந்தகுரலில் பேசி நடித்த படங்களில் இதுவும் ஒன்று.
இந்த படத்தை டி.எஸ்.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கி இருந்தார். சங்கர் & கணேஷ் இசை அமைத்திருந்தனர். சந்திரசேகர், மனோரமா, தியாகு, சார்லி, செந்தில், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
அநாதையான மோகன் கிராமத்து பெண்ணான கல்யாணியை திருமணம் செய்து கொள்ள விரும்புவார். ஆனால் கல்யாணியின் தந்தை என் மகளை கூட்டுகுடும்பத்திற்குதான் கட்டிக் கொடுப்பேன் என்ற பாலிசியை வைத்திருப்பார். இதனால் மோகன் தனது அலுவலக நண்பர்களை தனது குடும்ப உறுப்பினர்களாக நடிக்க வைத்து கல்யாணியை திருமணம் செய்வார் அதன் பிறகு வரும் பிரச்னைகளை காமெடியாக சொன்ன படம்.