உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளராக இயக்குனர் வினோத்

தயாரிப்பாளராக இயக்குனர் வினோத்

தமிழில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியவர் வினோத். தற்போது முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தை இயக்கியுள்ளார். தணிக்கை சான்றிதழ் பிரச்னையால் பட வெளியீட்டில் தாமதமாகி உள்ளது. இதையடுத்து வினோத் என்ன படத்தை இயக்கவுள்ளார் என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில் வினோத் அவரின் நீண்ட நாள் முயற்சியை இப்போது கையில் எடுத்துள்ளார். அதன்படி, வினோத் புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இதில் உருவாகும் முதல் படத்தில் கதாநாயகனாக நட்டி நட்ராஜ் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் வினோத் தான் எழுதியுள்ளார். இப்படத்தை குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா இயக்குகிறாராம். முதற்கட்ட படப்பிடிப்பு கூட துவங்கி விட்டதாக சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !