அடுத்தடுத்து போட்டோஷுட், கலக்கல் புகைப்படங்களுடன் காஜல் அகர்வால்
ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் காஜல் அகர்வால். துறுதுறுவென நடிப்பார், நன்றாக நடனமாடுவார், கிளாமர் காட்டுவதிலும் தயங்க மாட்டார். சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஆண் குழந்தைக்கும் தாயானார்.
கடந்த பத்து வருடங்களாகவே அவருக்கு வருடத்திற்கு ஓரிரு படங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது ஹிந்தியில் 'த இந்தியா ஸ்டோரி, ராமாயண்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 111வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
கடந்த சில நாட்களாக தினமும் போட்டோஷுட் நடத்தி அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாரோ அப்படியான தோற்றத்தில்தான் தற்போதும் இருக்கிறார் காஜல். புதிய வாய்ப்புகளுக்காக அவர் இப்படி போட்டோஷுட் நடத்தி வருகிறார் என்கிறார்கள்.