உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பிரேமலு 2' கைவிடப்பட்டது : ஹீரோவே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

'பிரேமலு 2' கைவிடப்பட்டது : ஹீரோவே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


கடந்த 2024ல் மலையாளத்தில் வெளியாகி 100 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பிரேமலு. இந்த படத்தில் அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த நஸ்லென் என்பவர் கதாநாயகனாக நடித்திருந்தார். இதில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய பிரபலம் ஆனார் நடிகை மமிதா பைஜு. இந்த படத்தை இயக்குனர் கிரிஷ் ஏ.டி. என்பவர் இயக்கியிருந்தார். இதன் வெற்றியை தொடர்ந்து பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. அது குறித்த அறிவிப்பும் கூட வெளியானது. ஆனால் அதன்பிறகு சமீப காலமாக அந்த படம் உருவாவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

இந்த நிலையில்தான் அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நஸ்லென் ஒரு பேட்டியில் கூறும்போது, பிரேமலு 2 தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. ஒருவேளை எதிர்காலத்தில் நடக்கலாமோ என்னவோ, ஆனால் இப்போதைக்கு இல்லை என்றும் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை முழுமையாக திருப்தி அளிக்கவில்லை என்றும், ஹிட்டான படம் என்பதாலேயே அதன் பெயரை பயன்படுத்தி அவசரமாக இரண்டாம் பாகம் எடுக்க தயாரிப்பு நிறுவனம் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !