உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் நடிக்க வந்தார் ரவி மோகன்

மீண்டும் நடிக்க வந்தார் ரவி மோகன்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் ஓரிரு வாரங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவரது தோழியான கெனிஷா அவரை விட்டுப் பிரிந்ததன் காரணமாக நடந்த சந்திப்பு அது. அப்போது பேசிய ரவி மோகன், அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி மீது சில பல குற்றச்சாட்டுகளை வைத்தார்.

தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறினார். இதனால், அவர் நடித்து வந்த படங்களின் படப்பிடிப்புகள் தாமதமாகின.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், நிவின் பாலி, சம்யுக்தா மற்றும் பலர் நடிக்கும் 'பென்ஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் ரவி மோகன். ஆனால், அவரது அறிவிப்பின் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போனது என்றார்கள்.

இந்நிலையில் தான் பேசியதற்கு மாறாக படப்பிடிப்பில் வந்து கலந்து கொண்டுள்ளார். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரவி மோகன் நடித்த படப்பிடிப்புப் புகைப்படங்களைப் பகிர்ந்து இதை உறுதி செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !