உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நல்ல கதைக்காக காத்திருந்தது தவறான முடிவு : ஜெய்

நல்ல கதைக்காக காத்திருந்தது தவறான முடிவு : ஜெய்

நடிகை ஜெய் கடந்த 22 வருடங்களாக தமிழ் சினிமா படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, சென்னை 28 என அவர் திரைப்பயணத்தில் முக்கியமான படங்கள் இருந்தாலும், அவர் இன்னும் வெற்றிக்காக ஓடிக் கொண்டு தான் இருக்கிறார்.

சமீபத்தில் ஜெய் அளித்த பேட்டியில் நல்ல கதைக்காக காத்திருந்தது தவறான முடிவு என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ஒரு வெற்றிக்குப் பிறகு நீண்ட காலம் இடைவெளி விட்டது தவறான முடிவாகத் தோன்றுகிறது. அந்த காலகட்டத்தில் தான் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி போன்ற பல புதிய கதாநாயகர்கள் திரையுலகிற்கு அறிமுகமானார்கள்.

ஒரு கதையைத் தவிர்த்துவிட்டு, அதைவிட சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று காத்திருக்கும் போது, அந்த வாய்ப்புகள் மற்ற புதிய நடிகர்களுக்கு சென்றது. சிறிய இடைவெளி விட்டால் புதிய நடிகர்கள் வருகிறார்கள், இடைவெளி விடாமல் நடித்தால் படங்கள் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறுவதில்லை. இதற்கான சரியான தீர்வும், வெற்றி பெறுவதற்கான சரியான வாய்ப்பும் இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2026-06-01 20:27:08

ஜெய் வெற்றி படங்கள் என்று சொன்ன நான்கு படங்களில் கூட அவர் extra fitting தான் . அவர் தானா இருந்தால் போதும் தலய பார்த்து copy தளபதி ல பாதி நான் தான் சொல்லிட்டு இல்லாம, சொந்தமா ட்ரை பண்நா அவர் பேருக்கு ஏற்ற மாதிரி "ஜெய்"க்க முடியும்