வாசகர்கள் கருத்துகள் (1)
புருஷன் பொண்டாட்டி ஒரே சமயம் வெற்றி ..மிக சந்தோஷம் .. அது continue ஆகணும். ஆனால் தலைக்கனம் ஏறி அவுங்க கூவத்தை திறக்காமல் இருந்தால் அதை விட சந்தோசம்
சூர்யா நடித்த 'கருப்பு' படம் 300 கோடியை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. 12 ஆண்டுகளுக்குபின் கிடைத்த வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சூர்யா. அதனால், படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், கேமராமேன் விஷ்ணு, எடிட்டர் கலைவாணன் ஆகியோருக்கு மகேந்திரா பிஈ6 பேட்மேன் எடிசன் எலக்ட்ரிக் கார் கொடுத்து இருக்கிறார் சூர்யா. பரிசாக வழங்கப்பட்ட இந்த காரின் மதிப்பு 30 லட்சத்துக்கு மேல் என்கிறார்கள். இந்த படத்துக்கு மட்டுமல்ல, இதற்கு முன்பு தங்கள் பட ஹீரோ, இயக்குனருக்கு சூர்யா, கார்த்தி ஆகியோர் கார் கொடுத்து இருக்கிறார்கள்.
அந்தவகையில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்துக்காக இயக்குனர் பாண்டிராஜ்க்கு கார்த்தியும், 'சிங்கம்' படத்துக்காக இயக்குனர் ஹரிக்கு சூர்யாவும் கார் பரிசாக கொடுத்து இருக்கிறார்கள். அதேபோல், 'மெய்யழகன்' இயக்குனர் பிரேமுக்கும் கார்த்தி கார் பரிசாக கொடுத்து இருக்கிறார். 'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்காக இயக்குனர் விக்னேஷ்சிவனும் கார் பரிசாக பெற்று இருக்கிறார்கள்.
அதில் இப்போது கொடுத்த கார்தான் காஸ்ட்லியாம். நாங்களும் படத்தில் பணியாற்றி இருக்கிறோம். எங்களுக்கும் பரிசு வேண்டும் என்று கருப்பு படத்தில் பணியாற்றிய மற்ற கலைஞர்களும், நடிகர்களும் உரிமையாக கேட்க, விரைவில் நடக்க இருக்கும் வெற்றி விழாவில் அவர்களுக்கும் தகுந்த பரிசு வழங்கும் திட்டம் இருக்கிறதாம். இந்தியில் ஜோதிகா நடித்த 'சிஸ்டம்' வெப்சீரியலும் வெற்றி பெற்றுள்ளதால் சூர்யா, ஜோதிகா இருவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.
புருஷன் பொண்டாட்டி ஒரே சமயம் வெற்றி ..மிக சந்தோஷம் .. அது continue ஆகணும். ஆனால் தலைக்கனம் ஏறி அவுங்க கூவத்தை திறக்காமல் இருந்தால் அதை விட சந்தோசம்