உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆளே மாறிய 'அங்கீகாரம்' ஹீரோ

ஆளே மாறிய 'அங்கீகாரம்' ஹீரோ


இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஹீரோக்களாகி இருக்கிறார்கள். தயாரிப்பாளராக இருந்தவர்கள் ஹீரோ ஆனது குறைவு. நயன்தாரா நடித்த 'அறம்', சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ, டாக்டர், அயலான்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கேஜேஆர், 'அங்கீகாரம்' என்ற படத்தின் மூலம் ஹீரோ ஆகியிருக்கிறார். இவர் பிரபுதேவா, நயன்தாரா உள்ளிட்ட பலரின் நண்பர். தென்பதியான் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படம் இந்த மாதம் வெளியாக உள்ளது.

வழக்கமான ஹீரோவாக அல்லாமல், தடகள வீரராக இதில் கேஜேஆர் நடித்து இருக்கிறார். இதற்காக ஹீரோக்கள் போல கடந்த 2 ஆண்டுகளாக கடும் உடற்பயிற்சி செய்து நிஜ தடகள வீரராகவே மாறியிருக்கிறாராம். அதற்கேற்ற பயிற்சி எடுத்து, படப்பிடிப்பில் கலந்துகொண்டு இருக்கிறார். அதனால், டிரைலர், போட்டோவின் அவர் உடல்அமைப்பை பார்த்தவர்கள் பாராட்டி வருகிறார்களாம். விளையாட்டு, கோர்ட், நீதி கதையும் அழுத்தமாக இருக்கிறதாம். இந்த படம் குறித்து நயன்தாரா, பிரபுதேவா, சிவகார்த்திகேயன் பேசுவார்களா? அல்லது படம் வெளியானபின் பாராட்டுவார்களா என்பது கேள்வியாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !