தேவா உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி : கலங்கிய மகனை ஆரத்தழுவி ஆறுதல்
ADDED : 30 minutes ago
தேனிசைத் தென்றல் என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்த தேவா இன்று(அக்., 17) திடீரென காலமானார். அவரின் உடலுக்கு குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகத்தினர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், தி நகரில் உள்ள பத்மநாபன் தெருவில் அமைந்திருக்கும் தேவாவின் வீட்டுக்கு நேரில் சென்றார். அங்கு அவரது உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். கண்ணீர் மல்க இருந்த தேவா மகன் ஸ்ரீகாந்த் தேவாவை ஆரத்தழுவி ஆறுதல் கூறி தேற்றினார்.
நாளை மதியம் 1 மணிக்கு தி நகரில் இருந்து தேவாவின் இறுதிப்பயணம் புறப்படுகிறது. சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள கிராமத்தில் இறுதிச்சடங்கு நடக்கிறது.