உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛வாராரு வாராரு... அழகர் வாராரு...' : மதுரை ‛கள்ளழகர்' என்றாலே தேவா பாடல் தான்

‛வாராரு வாராரு... அழகர் வாராரு...' : மதுரை ‛கள்ளழகர்' என்றாலே தேவா பாடல் தான்

மறைந்த இசையமைப்பாளர் தேவா, 450க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் பல நூறு பாடல்களை தந்துள்ளார். அவரது ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியவை. பக்தியாகட்டும், வெஸ்டர்னாகட்டும், மெலோடியாகட்டும், நாட்டுப்புறம் மற்றும் கானா பாடல்கள் ஆகட்டும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக இருக்கும். இதில் மதுரைக்கு என்று ஒரு அடையாளமாக தேவாவின் பாடல் உள்ளது. அது தான் ‛வாராரு வாராரு... அழகர் வாராரு...' பாடல்.

1999ம் ஆண்டு பாரதி இயக்கத்தில் விஜயகாந்த், லைலா, மேஜர் சுந்தர்ராஜன், சோனு சூட், மணிவண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் இது. இதற்கு தேவா இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் மதுரை அழகர்கோவில் சுந்தர்ராஜ பெருமாளான கள்ளழகரை கொண்டாடும் விதமாக ‛வாராரு வாராரு அழகர் வாராரு....' என்ற பாடல் இடம் பெற்றது. இதை தேவாவே பாடியும் இருந்தார். இந்த பாடல் பட்டித்தொட்டியெங்கும் கொண்டாடப்பட்டது.
இன்றும் மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் எதிர்சேவை, ஆற்றில் இறங்கும் நிகழ்வு மற்றும் அவர் மீண்டும் தனது இருப்பிடத்திற்கு திரும்பும் வரை எங்கும் பார்த்தாலும் இந்த பாடல் தான் ஒலித்துக் கொண்டே இருக்கும். இந்த பாடல் ஒலித்தாலே மதுரை மக்களுக்கு தானாகவே பக்தியை தாண்டி ஒருவித வைப் ஏறும். அந்தளவுக்கு இந்த பாடல் மதுரை மக்களின் உயிரில் கலந்த ஒன்றாகிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !