உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆற்காடு அருகே அப்பாவின் சொந்த ஊரில் இறுதிச்சடங்கு : தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் பேட்டி

ஆற்காடு அருகே அப்பாவின் சொந்த ஊரில் இறுதிச்சடங்கு : தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் பேட்டி

இசையமைப்பாளர் தேவாவின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் சென்னை, திநகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய், திமுக., தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தேவாவின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேவாவின் மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா, ‛‛என்னால் பேச முடியவில்லை. திடீரென அப்பா எங்களை விட்டு போய்விட்டார். அப்பாவிற்கு கார்டியாக் அரஸ்ட். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம். இருந்தாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அப்பாவிற்கு அரசு மரியாதை உடன் இறுதிச்சடங்கு நடக்கும் என அறிவித்துள்ளனர். அதற்காக என் குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்பாவின் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூரில் இறுதிச்சடங்கு நடக்கிறது. நாளை(அக்., 18) ஒரு மணிக்கு சென்னை திநகர் வீட்டிலிருந்து அவர் உடல் சொந்த ஊரான ஆற்காடு புறப்படுகிறது. மாலை அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடக்கிறது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !